In this section Tamil Speakers who are learning Hindi and who have some tips for other Tamilians learning Hindi will share their ideas. Choose and use whatever works for you.
புதிதாக ஒரு மொழி கற்கும் பொழுது, அதுவும் தன் தாய் மொழியிலிருந்து வேறுபட்ட மொழி கற்கும் பொழுது, சில யுக்திகளை உபயோகித்து சுலபமாகவும், சீக்கிரமாகவும் கற்கலாம்.
உதாரணத்திற்கு, ஹிந்தி எழுத்துக்கள் கற்பது தமழர்களுக்கு கடினமாக இருக்கலாம்.
தமிழில் ஒரு க எழுத்து இருக்கிறது. அதற்கு சமமாக ஹிந்தியில் क, ख, ग, घ என்று நான்கு எழுத்துக்கள் உள்ளன.
இதை கேட்டு பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் கடினமாக தோன்றலாம்.
இதற்கு ஒரு சுலபமான வழி யோசித்து பாருங்கள்.
क - இந்த எழுத்தைப் பார்த்தால் ஒருவர் தன் கையை கட்டிக் கொண்டு நிற்பது போல் இருக்கிறது.
நீங்கள் இப்பொழுது உங்கள் மனக் கண் முன் ஒரு படம் கொண்டு வாருங்கள். ஒருவர் மலை மீது ஏறி உச்சியில் நின்று, தன் கையைக் கட்டிக் கொண்டு க, க, க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரி ஒரு அதிசயமான கற்பனையால் உங்கள் மனம் அந்த எழுத்தை உங்கள் மூளையில் பதித்து மறக்க விடாமல் செய்யும்.
இப்பொழுது இரண்டாவது ख க வை பார்க்கலாம்.
ஹிந்தியில் र இந்த எழுத்து ர.
ஹிந்தியில் व இந்த எழுத்து வ.
ஹிந்தியில் ख இந்த எழுத்து க - இரண்டாவது க
இந்த இரண்டாவது கவை சொல்ல க்க சொல்வதுபோல் வேகமாக சேர்த்து சொல்லுங்கள்.
அல்லது க என்று சொல்லும் பொழுது எங்கிருந்து அந்த சத்தம் உண்டாகிறது என்று கவனியுங்கள். தொண்டையில் ஒரு இடத்தில் சற்றே அழுத்தி பிறகு காற்றை வெளியே விடும்பொழுது நாம் க என்ற ஒலியை வெளிப்படுத்துகிறோம்.
அதே இடத்தில் சற்று அதிக நேரம் அழுத்தி பிறகு காற்றை வெளியே விட்டால் க்க அல்லது kha அல்லது ख என்ற ஒலி கேட்கும்.
இப்பொழுது ख என்ற எழுத்தை கவனமாகப் பார்த்தால் र மற்றும் व சேர்த்து எழுதியது போல் இருக்கிறது.
இதை நினைவு வைத்துக் கொள்ள ஒரு சுலமான வழி:
ख - அக்கா! ரவா இட்லி!! खाना दो!
ஒரு நிமிடம் கற்பனை உலகிற்கு செல்லுங்கள். உங்களுக்கு உயிர் போகும் பசி. அதுவும் சாதாரண பசியல்ல. ரவா இட்லி பசி. வீட்டில் உங்கள் அக்கா மட்டும்தான் இருக்கிறார்கள். நீங்கள் சாப்பாட்டு மேசையில் ஒரு தட்டை எடுத்து, கரண்டியால் தட்டி சத்தம் போட்டு சொல்கிறீர்கள்.
அக்கா! ரவா இட்லி!! கானா தோ - खाना दो.
பிறகு எப்பொழுது இந்த எழுத்தை பார்த்தாலும் உங்களுக்கு ரவா இட்லியும் கானா வும் ஞாபகம் வரும்.
ख - ஓஹோ ரவா இட்லி கானா இது எனக்கு தெரியுமே என்று சொல்வீர்கள்.
இவ்வளவு கதைக்கு பிறகு ख से खाना க சே க்கானா மறந்துவிடாதீர்கள் 😁
நீங்கள் இதால் இரண்டாவது க மட்டும் கற்கவில்லை. ர வும் வ வும் சேர்த்து கற்றுக் கொண்டீர்கள்!
இப்பொழுது क, ख, ग, घ வில் மூன்றாவது க வை பார்க்கலாம். இந்த மூன்றாவது க வை சொல்வது நமக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை.
தமிழில் கவனி, கவனம், கருடன், மகன், சைகை போன்ற சொற்களில் க ग ga என்று ஒலிக்கிறது.
இந்த எழுத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்.
ग இந்த எழுத்தை கவனமாகப் பார்த்தால் ஆங்கில எழுத்து j அல்லது ஒரு தாத்தா தடி போல இருக்கிறது.
அந்த தாத்தா தடி அருகில் ஒரு கோடு இருக்கிறது.
கற்பனையில் இப்படி கண்டு பாருங்கள். ஒரு தாத்தா தன் தடி எடுத்துக் கொண்டு செல்கிறார், துணைக்கு அவருடன் ஒருவர் கூடவே செல்கிறார். தாத்தா பாடிக்கொண்டே நடக்கிறார்.
ग தாத்தா தாடியுடன், துணைக்கு ஒருவருடன் பாடிக்கொண்டே செல்கிறார்.
உங்கள் அப்பா உங்களை கேட்கிறார், 'தாத்தா எங்கே?'
நீங்கள் சொல்கிறீர்கள்
தாத்தா தடியோடு, ஒரு துணையோடு கயே கானா காதே காதெ.
Gaye gaanaa gaate gaate
சொல்லிபாருங்க!!
இப்பொழுது நாலாவது க घ பார்க்கலாமா?
மூன்றாவது க அல்லது கவனம் என்ற சொல்லில் இருக்கும் முதல் ஒலி சொல்லும் பொழுது உங்கள் தொண்டையில் எங்கே அழுத்தம் விழுகிறது என்று கவனியுங்கள். அதே இடத்தில் ஒரு வினாடி அதிகமாக அழுத்தம் கொடுங்கள், घ, நான்காவது க, gha, ஒலிக்க முடியும்.
இப்பொழுது घ என்ற எழுத்தைப் பாருங்கள். இது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்றை நினைவுறுத்துகிறதா என்று யோசியுங்கள்.
பார்த்தால் கொஞ்சம் எண் 3 போல் இருக்கிறது. இந்த மூன்றை திருப்பி போட்டு படுக்கையில் படுக்க வைத்தால் இப்படி இருக்கலாம்.
ஒரு நிமிடம் கடோத்கஜனை நினைவு கூறுங்கள். மகாபாரதத்தில் பீமன் மற்றும் ஹிடும்பி என்ற ராட்சசியின் பிள்ளை கடோத்கஜன்.
அவன் நிறைய ஆகாரம் சாப்பிடுவான். கல்யாண சமையல் சாதம் பாட்டு நினைவிருக்கிறதா உங்களுக்கு?
இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு, உப்பிய வயிருடன் படுக்கையில் படுத்திருக்கிறான் கடோத்கஜன்.
இந்த காட்சியை மனதில் வைத்து घ gha இந்த நான்காவது க வை பாருங்கள்.
அவன் தூங்கி குறட்டை விடும் பொழுது அவனுடைய வாய் சிறிதே திறந்து த dha ध ध என்று சத்தம் வருகிறது.
Ghatotkach घटोत्कच ध ध ध என்று குறட்டை விட்டு தூங்கினான்.
கவனமாகப் பாருங்கள். घ வில் மேலிருக்கும் கோடு முழுவதாக மூடி இருக்கிறது. ध வில் பாதிதான் மூடி இருக்கிறது.
घ ध
இதிலிருந்து நீங்கள் gha மட்டும் இல்லை dha வும் படிக்க கற்றுக் கொண்டு விட்டீர்கள்.
நான்காவது க - gha - घ
நான்காவது த - dha - ध
நீங்கள் சொல்வது சரிதான்....இப்பொழுது இரண்டாவது ख க வை பார்க்கலாம்.
ஹிந்தியில் र இந்த எழுத்து ர.
ஹிந்தியில் व இந்த எழுத்து வ.
ஹிந்தியில் ख இந்த எழுத்து க - இரண்டாவது க
இந்த இரண்டாவது கவை சொல்ல க்க சொல்வதுபோல் வேகமாக சேர்த்து சொல்லுங்கள்.
அல்லது க என்று சொல்லும் பொழுது எங்கிருந்து அந்த சத்தம் உண்டாகிறது என்று கவனியுங்கள். தொண்டையில் ஒரு இடத்தில் சற்றே அழுத்தி பிறகு காற்றை வெளியே விடும்பொழுது நாம் க என்ற ஒலியை வெளிப்படுத்துகிறோம்.
அதே இடத்தில் சற்று அதிக நேரம் அழுத்தி பிறகு காற்றை வெளியே விட்டால் க்க அல்லது kha அல்லது ख என்ற ஒலி கேட்கும்.
இப்பொழுது ख என்ற எழுத்தை கவனமாகப் பார்த்தால் र மற்றும் व சேர்த்து எழுதியது போல் இருக்கிறது.
இதை நினைவு வைத்துக் கொள்ள ஒரு சுலமான வழி:
ख - அக்கா! ரவா இட்லி!! खाना दो!
ஒரு நிமிடம் கற்பனை உலகிற்கு செல்லுங்கள். உங்களுக்கு உயிர் போகும் பசி. அதுவும் சாதாரண பசியல்ல. ரவா இட்லி பசி. வீட்டில் உங்கள் அக்கா மட்டும்தான் இருக்கிறார்கள். நீங்கள் சாப்பாட்டு மேசையில் ஒரு தட்டை எடுத்து, கரண்டியால் தட்டி சத்தம் போட்டு சொல்கிறீர்கள்.
அக்கா! ரவா இட்லி!! கானா தோ - खाना दो.
பிறகு எப்பொழுது இந்த எழுத்தை பார்த்தாலும் உங்களுக்கு ரவா இட்லியும் கானா வும் ஞாபகம் வரும்.
ख - ஓஹோ ரவா இட்லி கானா இது எனக்கு தெரியுமே என்று சொல்வீர்கள்.
இவ்வளவு கதைக்கு பிறகு ख से खाना க சே க்கானா மறந்துவிடாதீர்கள் 😁
நீங்கள் இதால் இரண்டாவது க மட்டும் கற்கவில்லை. ர வும் வ வும் சேர்த்து கற்றுக் கொண்டீர்கள்!
நானும் புதிய சொற்களைக் கற்கும் போது எனக்கும் இது போன்ற ஒரு சில காட்சிகள் நினைவிற்கு வந்தது
இப்பொழுது நாலாவது க घ பார்க்கலாமா?
மூன்றாவது க அல்லது கவனம் என்ற சொல்லில் இருக்கும் முதல் ஒலி
சொல்லும் பொழுது உங்கள் தொண்டையில் எங்கே அழுத்தம் விழுகிறது என்று கவனியுங்கள். அதே இடத்தில் ஒரு வினாடி அதிகமாக அழுத்தம் கொடுங்கள், घ, நான்காவது க, gha, ஒலிக்க முடியும்.
இப்பொழுது घ என்ற எழுத்தைப் பாருங்கள். இது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்றை நினைவுறுத்துகிறதா என்று யோசியுங்கள்.
பார்த்தால் கொஞ்சம் எண் 3 போல் இருக்கிறது. இந்த மூன்றை திருப்பி போட்டு படுக்கையில் படுக்க வைத்தால் இப்படி இருக்கலாம்.
ஒரு நிமிடம் கடோத்கஜனை நினைவு கூறுங்கள். மகாபாரதத்தில் பீமன் மற்றும் ஹிடும்பி என்ற ராட்சசியின் பிள்ளை கடோத்கஜன்.
அவன் நிறைய ஆகாரம் சாப்பிடுவான். கல்யாண சமையல் சாதம் பாட்டு நினைவிருக்கிறதா உங்களுக்கு?
இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு, உப்பிய வயிருடன் படுக்கையில் படுத்திருக்கிறான் கடோத்கஜன்.
இந்த காட்சியை மனதில் வைத்து घ gha இந்த நான்காவது க வை பாருங்கள்.
அவன் தூங்கி குறட்டை விடும் பொழுது அவனுடைய வாய் சிறிதே திறந்து த dha ध ध என்று சத்தம் வருகிறது.
Ghatotkach घटोत्कच ध ध ध என்று குறட்டை விட்டு தூங்கினான்.
கவனமாகப் பாருங்கள். घ வில் மேலிருக்கும் கோடு முழுவதாக மூடி இருக்கிறது. ध வில் பாதிதான் மூடி இருக்கிறது.
घ ध
இப்பொழுது கடோத்கஜன் குடை பிடித்துக் கொண்டு தூங்குகிறான் என்று கற்பனை செய்யுங்கள்.
छ cha छाता chaataa umbrella குடை
घ छ ध
இதிலிருந்து நீங்கள் gha மட்டும் இல்லை dha வும் படிக்க கற்றுக் கொண்டு விட்டீர்கள். இரண்டாவது ச வும் உங்களுக்கு தெரிந்து விட்டது.
நான்காவது க - gha - घ - घर ghar house வீடு
நான்காவது த - dha - ध - धन dhan wealth செல்வம்
இரண்டாவது ச - cha - छ - छाता chaataa umbrella குடை
இப்பொழுது இந்த வாக்கியத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட நான்கு க எழுத்துக்களையும் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
हमे घर पर पिताजी का खत मिला। कल हम गंगा देखने जाएंगे।
இதில் முதல் சொல் எண் 1. கடைசி சொல் எண் 12.
எந்த சொல்லில் எந்த க இருக்கிறது என்று கீழே உங்கள் பதிலை போடுங்கள்.
உதாரணம்: முதல் க, ka ஐந்தாவது சொல்.
4 1 2 1 3 3 2 1
Last one 3
2வது சொல் _ 4வது க घ
இப்பொழுது இந்த வாக்கியத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட நான்கு க எழுத்துக்களையும் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
हमे घर पर पिताजी का खत मिला। कल हम गंगा देखने जाएंगे।
இதில் முதல் சொல் எண் 1. கடைசி சொல் எண் 12.
எந்த சொல்லில் எந்த க இருக்கிறது என்று கீழே உங்கள் பதிலை போடுங்கள்.
உதாரணம்: முதல் க, ka ஐந்தாவது சொல்.
5வது சொல் _ 1வது க क
6வது சொல் _ 2வது க ख
8வது சொல் _ 1வது க क
10வது சொல் _ 3வது க ग
11வது சொல் _ 2வது க ख
12வது சொல் _ 3வது க ग