Language Community

Notifications
Clear all

Thirukkural

(@chat-askrangoo-com)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 174
Topic starter  

நீங்கள் திருக்குறள் படித்திருக்கிறீர்களா? உங்கள் மனதைத் தொட்ட குறள் எது? உங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டி உங்கள் மனதில் இடம் பிடித்த குறளை பகிருங்கள். அது ஏன் உங்களுக்கு மிகவும் பிடித்த குறள் என்றும் சொல்லுங்கள்.

Have you found a Kural that resonates for you? You might have learnt one when you were in school but to this day you feel your life experieces have made it more meaningful to you. Share with us your favourite Kural. N. Natesan alias Pollachi Nasan has created a course by which school children can write their own meaning to Thirukkural, think about their life experiences related to that Kural and integrate the teaching of Thiruvalluvar in their every day living.

Find out more about it here: https://languages.want2learn.com/thirukkural

 


   
Quote
(@chat-askrangoo-com)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 174
Topic starter  

திருக்குறள் - 1059
அதிகாரம். - 106 , இரவு -
இல்லாத கொடுமைக்கு கை ஏந்துவது

" ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை".
....- - -....
பொருள் :
பிச்சை பெறுபவனே பெரிய வள்ளல்
.... - - -....
" கொடுக்கும் வள்ளல் குணமுள்ள மக்கள் தாராளமாக இருக்கிறார்கள்

கொடுங்கள் எங்களுக்கு என்று கேட்க, எதுவும் இல்லாத
மக்கள் எவரும் இல்லை என்றால்

கொடுக்க இயலாத கொடைக்கு என்ன மதிப்பு".
.... - - -....
1) பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை .... ( அறநெறி - 219)

2 ) பிச்சை எடுப்பதும், பிச்சைக் கொடுப்பதும், கொடை தன்மையில் சரிக்கு சமம் ( குறள் - 1054," இரத்தலும் ஈதலே போலும் ")

3 ) பிச்சைப் பெற்றுக் கொள்வதே பெரிய கொடை
( Kahlil Gibran - THE PROPHET, Chapter IV.)
.... - - - -....

- கோ.சித்தார்த்தன்


   
ReplyQuote
Share: