Language Community

Telangana Tamil San...
 
Notifications
Clear all

Telangana Tamil Sangam Annual Day

(@chat-askrangoo-com)
Admin Admin
Joined: 2 years ago
Posts: 177
Topic starter  

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும்
5-ஆம் ஆண்டு விழா

*"பரதநாட்டியம் & நாட்டுப்புறக் கலைத் திருவிழா-2023"*

*24-12-2023,*
ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணி முதல்…
*இடம்: ஹரிஹர கலாபவன்,*
செகந்திராபாத்,
Venue: Hari Hara Kala Bhavan, Secunderabad

*சிறப்பு விருந்தினர்:-*
*மாண்புமிகு ஆளுநர்*
*டாக்டர் திருமதி. தமிழிசை* *சௌந்தரராஜன்* *அவர்கள்*
*தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை*

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக குடும்பமாய் நட்பால் இணைந்து நாட்டுப்புறக் கலைகளை போற்றுவோம்!


   
Quote
(@chat-askrangoo-com)
Admin Admin
Joined: 2 years ago
Posts: 177
Topic starter  
  • Telangana Tamil Sangam Annual Day Event! All are welcome!!

   
ReplyQuote
(@chat-askrangoo-com)
Admin Admin
Joined: 2 years ago
Posts: 177
Topic starter  
  1. சான்றோர் பெருமக்களுக்கு தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வணக்கங்கள்.

    *உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து.* - குறள்: 596

    நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா வரும் *டிசம்பர் 24ம் தேதி 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று செகந்திராபாத்தில் உள்ள ஹரிஹர கலாபவன்* விழா அரங்கில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடைபெற உள்ளது.

    இந்த மாபெரும் நிகழ்வில் *சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் மேதகு டாக்டர். திருமதி தமிழிசை சௌந்தரராஜன்* அவர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டு விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள்.

    மேலும் கெளரவ விருந்தினர்களாக மறத்தமிழர்
    மரியாதைக்குரிய
    *திரு. டி. ரொனால்ட் ரோஸ், இ.ஆ.ப., ஆணையர், பெருநகர ஐதராபாத் மாநகராட்சி, தெலுங்கானா அரசு.*

    மரியாதைக்குரிய
    *திரு. மாமிடி ஹரிகிருஷ்ணா, இயக்குனர், மொழி மற்றும் கலாச்சாரத் துறை,* தெலுங்கானா அரசு, ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கத்தின் புதிய லட்சிணை மற்றும் இணையதளம் கெளரவ விருந்தினர் பொற்கரங்களால் வெளியிடப்பட உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் *தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை பெருமையுடன் வழங்கும் கண்கவர் பரதநாட்டியம் மற்றும் தமிழக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்* கோலாகலமாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    தமிழ் உறவுகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

    தமிழால் இணைவோம்!
    தமிழால் உயர்வோம்!!

    வாழ்க தமிழ்! வளர்க நம் தமிழ் உறவுகள்!!

    தெலுங்கானா தமிழ்ச் சங்கம்
    Telangana Tamil Sangam (Govt. Regd.781)

    அழைப்பின் மகிழ்வில்....

    M.K. போஸ்,
    தலைவர், 92465 02855

    P. தருமசீலன், துணைத்தலைவர்,
    98495 55470

    S. ராஜ்குமார், பொதுச்செயலாளர்
    96522 34563

    N. நேரு சாஸ்திரி, பொருளாளர்,
    94913 82827
    T. குமாரராஜன், துணைப் பொருளாளர்,

    செயற்குழு உறுப்பினர்கள்:
    இராஜன்முத்துசுவாமி
    J. S. வாசன்
    E. சரவணன்
    P. உமாகணேசன்
    G. செல்வகுமரன்
    D. சாந்தகுமார்
    V. பிரபு விஜயன்
    M. P. துரைசாமி
    S. தெட்சிணாமூர்த்தி
    G. மீனாட்சிசுந்தரம்
    R. ஜெயபால்
    S. அன்றோ வசந்த்
    S. அமலன் ஜெயந்த்
    K. ஜெயப்பிரகாஷ்
    E. ஜெகதீசன்
    M. தாமோதரன்
    P. இராஜேந்திரன்
    V.M. வேல்முருகன்

    Follow us on social media Facebook/Twitter/Instagram: @ TelanganaTamilSangam


   
ReplyQuote
Share: